Wednesday, April 3, 2013

SCIENTIFIC ASTROLOGY INTRO

நண்பர்களே ! வணக்கம்.

எல்லாம் வல்ல கடவுளின் பெயரால் வாழ்த்துக்கள் !

இங்கு எனது ஜோதிட அனுபவங்களையும், ஆராய்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கிறேன் !

நம் வாழ்க்கை பாதையில் வரும் துன்ப, துயரங்களை போக்க கடவுள் நமக்கு அருளிய மிக முக்கியமான கருவியே இந்த அறிவியல் ஜோதிடம் .

இதன் மூலம் நாம் நமது வாழ்க்கையை நம் விருப்பபடி அமைத்து கொள்ளலாம் !

அதற்குண்டான வழிமுறைகள் :

1. ஜோதிட சாஸ்திரம்
2. ஜோதிட எண்ணியல்
3. ஜோதிட வாஸ்து

இந்த 3 வழிமுறைகள் மூலம் நமது பிரச்சனைகளை அறிந்து கொள்ளளலாம்.

நாம் நமது பிரச்சனைகளை அறிந்து கொள்வதன் மூலம் மட்டும் நம் வாழ்க்கை சந்தோசமாக மாறி விடுமா?

இல்லை !

அதற்க்கு தான் அறிவியல் ஜோதிட பரிகாரங்கள் உள்ளன!

கடவுள் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாத படிக்கு உலகில் உண்டாக்க வில்லை. அந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை மனிதர்களாகிய நாம் தன நமக்கு கொடுக்க பட்டிருக்கும் அறிவை பயன் படுத்தி, கண்டு பிடிக்க வேண்டும்.

எப்படி ?

இந்த அறிவியல் ஜோதிடம் மூலம்...

ஒரு முடிச்சு போடப்பட்டிருக்கிரதென்றால்,

அதை அவிழ்க்கும் வழியும் ஏற்கனவே தீர்மானிக்க பட்டிருக்கிறது.

அதை அறியும் வழியே, நம் அறிவியல் ஜோதிடம்.

வாழ்க்கையில் முன்னேறும் முறை:

1. நம் வாழ்க்கை பிரச்சனைகளை கண்டறிவது.
2. அடையாளம்  கண்ட பிரச்சனைகளை புரிந்து கொள்வது
3. பிரச்சனைகளை ஆராய்வது
4. பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேடுவது
5. கிடைத்திருக்கும் தீர்வுகளை அலசுவது
6. கிடைத்திருக்கும் தீர்வுகளை எடை போடுவது
7. தீர்வுகளை எடை போட்டதற்கேற்ப வரிசை படுத்துவது
8. சரியான தீர்வை தேர்ந்தெடுப்பது
9. தேர்ந்தடுக்கப்பட்ட தீர்வை வாழ்வில் உடனடியாக அமல் படுத்துவது
10. தீர்வினால் வாழ்வின்  மாற்றங்களை கண்காணிப்பது
11. தேர்ந்தடுக்கப்பட்ட தீர்வை மறு பரிசீலனை செய்வது
12. தொடர்ச்சியாக வாழ்வின் ஏற்றங்களை கண்காணிப்பது
13. மேற்கண்ட படிகளை தொடர்ச்சியாக கடைபிடிப்பது ( எதிர்பார்க்கும் ரிசல்ட் வரும் வரை )

இவற்றை அறிவியல் ஜோதிடம் மூலம் அணுகி, மனித வாழ்க்கையை மேம்படுத்துவதே எமது நோக்கம்.

மேலும் தொடர்வோம்...

உங்கள்
ஆரோக்கிய தாஸ்
9840817333